பீகார் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் கவலைக்கிடம்!

ஞாயிறு சனவரி 24, 2021

பீகார் முன்னாள் முதல்வரும் ஆர்.ஜே.டி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை மோசமடைந்துள்ளதால் டெல்லிக்கு விமான ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வட இந்தியாவில் சமூக நீதிக்கான குரல்களில் மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குடன் இணைந்து பணியாற்றியவர் லாலு பிரசாத் யாதவ். இந்தியாவில் பாஜக வை எதிர்ப்பதில் முன்னேடுயாக திகழ்ந்தவர்.

இந்த நிலையில் லாலுவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து ராஞ்சி ரிம்ஸ் மருத்துவமனையில் லாலு அனுமதிக்கப்பட்டார். லாலுவுக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது. ஆனால் நிமோனியா பாதிப்பு இருப்பது உறுதியானது.

இதனையடுத்து லாலுவின் குடும்பத்தினர் ராஞ்சி சென்று அவரை சந்தித்தனர். இந்த நிலையில் ரிம்ஸ் மருத்துவமனையின் பரிந்துரையின்படி லாலு பிரசாத் யாதவ் விமான ஆம்புலன்ஸ் மூலம் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் லாலுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமது தந்தையின் உடல்நிலை கவலைக்குரியதாக இருப்பதாக லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.