பிணைமுறி மோசடிகாரர்கள்; கோட்டா பீதியில் உள்ளனர்!

சனி செப்டம்பர் 14, 2019

மத்திய வங்கி பிணைமுறி ​மோசடியில் ஈடுபட்ட சிலர் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி - ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்றுக்கிடையிலான பேச்சுவார்த்தையின் வெற்றிக்கு தடையாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 

மேற்படி, தரப்புக்கள் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்‌ஷ வெற்றிபெற்றுவிட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பார் என்ற அச்சத்தில் உள்ளதாலேயே இவ்வாறு செயற்படுகின்றனர் என்றும் சாடியுள்ளார்