பின்லாந்தில் நினைகூரப்பட்ட தமிழின அழிப்பின் 10 ஆம் ஆண்டு

திங்கள் மே 20, 2019

தமிழின அழிப்பு நாள் மே 18 நினைவேந்தல், கவனயீர்ப்பு நிகழ்வுகள், பின்லாந்தின் தலைநகரில் அமைந்துள்ள, senaatintori தேவாலய முற்றத்தில், மதியம் 12.00 மணியிலிருந்து 2.00 மணிவரை நடைபெற்றது.

வாழ்விட மக்களிற்கும், வேற்று நாட்டவர்களிற்கும் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன. சிறிலங்கா அரசினால் எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகள். மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அவர்களிற்கு விளக்கமளிக்கப்பட்டது.

கணிசமானளவு பின்லாந்து வாழ் தமிழ் மக்கள் நிகழ்வில் கலந்து கொண்டு தம் உணர்வுகளை வெளிப்படுத்தினர். மாவீரர்களிற்கும், எம் உறவுகளிற்குமாக சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது. 2.00 மணியளவில் நிகழ்வு நிறைவு பெற்றது.