பிரான்சில் ஆசிரியர் ஆறுமுகம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல்!

வியாழன் ஜூலை 16, 2020

பிரான்சில் கடந்த 16.07.2019 சாவடைந்த பொண்டி தமிழ்ச்சோலையின் முன்னாள் நிர்வாகி அமரர் கந்தையா ஆறுமுகம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

1

இதனையொட்டி அவரது நினைவுக் கல்லறையில் இன்று 16.07.2020 வியாழக்கிழமை பொண்டி தமிழ்ச்சோலை ஆசிரியர்களால் வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

h

அமரர் கந்தையா ஆறுமுகம் அவர்கள் 2008 ஆம் ஆண்டு பொண்டி தமிழ்ச் சோலையில் ஆசிரியராகத் தன்னை இணைத்துக் கொண்டு தொடர்ந்து தமிழ்ச்சோலை நிர்வாகியாக இருந்து பல செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்றுள்ளார்.

t

இவர் ஒரு சிறந்த நிர்வாகி. இவரது இழப்பு பொண்டி தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இட்டு நிரப்ப முடியாத இழப்பு என பொண்டி தமிழ்ச் சோலையில் கல்விகற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் தொிவித்துள்ளார்.

f

f

t