பிரான்சில் சோகம் - விமான விபத்தில் 5 பேர் பலி

ஞாயிறு அக்டோபர் 11, 2020

பிரான்சில் இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் சுற்றுலா பயணிகள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பிரான்ஸ் நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள லொச்சிஸ் நகரில் இருந்து நேற்று இரவு இலகுரக விமானம் ஒன்று 2 பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்தது.

அதேபோல், நாடியா செக்ஹயர் நகரில் இகுந்து லொச்சிஸ் நகர் நோக்கி டிஏ40 என்ற சுற்றுலா பயணிகள் விமானம் ஒன்று வந்து கொண்டிருந்தது.

எதிர்பாராத விதமாக இலகுரக விமானமும், சுற்றுலா விமானமும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இந்த விபத்தில் சுற்றுலா பயணிகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.