பிரான்சில் சோதியா கலைக் கல்லூரி பொங்கல் விழாவும் பரிசளிப்பும்!

செவ்வாய் சனவரி 21, 2020

 பிரான்சு லாச்சப்பல் பகுதியில் அமைந்துள்ள சோதியா கலைக் கல்லூரியின் வருடாந்த பொங்கல் விழா கடந்த (19.01.2020) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

வழமைபோன்று கல்லூரியின் பிரதம நிர்வாகி செல்வக்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்லூரியின் முன்றிலில் கோலமிட்டு பொங்கல் இடப்பட்டதுடன், மாணவர்களின் கலை நிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றிருந்தன. சொல்வதெழுதல் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும், வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி மதிப்பளிப்புச்செய்யப்பட்டிருந்தனர்.

y

இம்முறை நிகழ்வுகளை சோதியா கலைக்கல்லூரியின் இளையோர் அமைப்பினர் அழகாக ஒழுங்குசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் கல்லூரியின் நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.