பிரான்சில் இன்று இடம்பெறும் தமிழ்மொழி பொது எழுத்துத் தேர்வு!

சனி ஜூன் 01, 2019

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகம் வருடாந்தம் நடாத்தும் தமிழ்மொழி எழுத்துத் தேர்வு இன்று 01.06.2019 சனிக்கிழமை வழமைபோன்று LA MAISON DE EXAMENS 7,RUE RUE ERNEST RENAN 94114 ARCEIL (RER – B LA PLACE) என்ற முகவரியில் இடம்பெறவுள்ள அதேவேளை பிரான்சின் வெளிமாவட்டங்களிலும் இடம்பெறவுள்ளது எனத் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தெரிவித்துள்ளது..

இம்முறை பிரான்சில் Île De France மற்றும் பிரான்சின் வெளிமாவட்டங்களிலும் (ஸ்ரார்ஸ்பேர்க்,நீஸ்,போர்சோலை,முலுஸ்,துளுஸ்,றென்,தூர்,ஜியான்,போ,போர்தோ1, போர்தோ2, நெவர்) மொத்தம் 6 ஆயிரத்து 85 மாணவர்கள் தேர்வுக்குத் தோற்றுவுள்ளதுடன் 350 இற்கு மேற்பட்ட ஆசிரியர்களும் கடமையாற்றுகின்றனர்.

பிரான்சில் மஞ்சள் அங்கி போராட்டம் இன்று இடம்பெறுவதால் அனைவரையும் முன்கூட்டியே தமது பயணத்தை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.