பிரான்சில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும்!

புதன் நவம்பர் 13, 2019

தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 1000 நாட்கள் நடைபெறுவதையொட்டி அதற்கு வலுச்சேர்க்கும் முகமாக பிரான்சு லாச்சப்பல் பகுதியில்  பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு - தமிழீழ மக்கள் பேரவையின் ஏற்பாட்டில்  கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும் எதிர்வரும் (15.11.2019) வெள்ளிக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

 இந்நிகழ்வில் கலந்துகொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்துமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.