பிரான்சில் மேலும் ஒரு அச்சுவேலித் தமிழர் கொரோனாவிற்கு பலியானார்!

புதன் ஏப்ரல் 01, 2020

பிரான்சில் மேலும் ஒரு அச்சுவேலியைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கொரோனாவினால் இன்று உயிரிழந்துள்ளார். கதிரேசு அருணகிரிநாதன் (வயது 75 ) பிரான்ஸ் Le Pre Saint-Gervais என்ற இடத்தில வசித்துவந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது வசிப்பிடத்துக்கு கீழே உள்ள வர்த்தக நிலையத்திற்கு அடிக்கடி சென்று வந்ததினால் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இவரது மனைவிக்கும் இந்த தொற்று பீடித்துள்ளதாகத் தெரியவருகிறது.