பிரான்சில் நான்காவது கொரோனா தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிப்பு!

புதன் சனவரி 29, 2020

இந்த புதிய நோய்த்தாக்கம் பரிசில் கண்டறியப்பட்டுள்ளது. மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றபோதும், தாக்குதலுக்கு இலக்கான நான்காவது நபர் ஒரு சீன சுற்றுலாப்பயணி எனவும், 80 வயதுக்கு மேற்பட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
குறித்த நபருடன் சீனாவில் இருந்து வருகை தந்த ஏனைய நபர்களை கண்டறியும் முயற்சியில் தாம் ஈடுபட்டுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த 80 வயது நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.