பிரான்சில் நெருக்கடிக்குள் வைத்தியசாலைகள்!!

புதன் நவம்பர் 04, 2020

பிரான்சில் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் பொதுமுடக்கம், இறுக்கமற்ற, பெரும் தளர்வுகள் கொண்டதாக அமைந்துள்ளது.

பொருளாதாரத்தைத் தக்கவைக்க வேண்டும்.என்ற நோக்கில் மட்டுமே அறிவிக்கப்பட்ட இந்தப் பொதுமுடக்கம், மருத்துவத் துறையினர்க்குப் பெரும் சிக்கலையும், மக்களின் உயிரிற்கும் பேராபத்தினை ஏற்படுத்தி உள்ளதாக மருத்துவத் துறையினர் தங்களின் கோபத்தைத் தெரிவித்துள்ளனர்.

பிரான்சின் 32 மாவட்டங்களின், தங்களின் சக்தியை மீறிய நிலையில் வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி உள்ளாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் அதியுச்சமாக 5.000 தீவிரசிகிச்சை நோயாளிகளை மட்டுமே உள்வாங்கக் கூடிய நிலையிலேயே வைத்திசாலைகள் உள்ள நிலையில் ஏற்கனவே வைத்தியசாலைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் 3.900 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேநேரம் இதே வைத்தியசாலைகள், கொரோனா அற்ற, ஏனைய உயிராபத்தான நோயாளிகளையும் உள்வாங்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அரசு இவற்றைப் பற்றிச் சிந்திக்கவில்லை என்பதே மருத்துவத் துறையினரின் கோபமாக உள்ளது.