பிரான்சில் பெறியியலாளராக இரட்டிப்பு சிறப்புப் பட்டத்தைப்பெற்ற தமிழ்ச்சோலை மாணவன்!

ஞாயிறு பெப்ரவரி 03, 2019

பிரான்சு மண்ணிலே பிறந்து இன்று வரை ஆண்டு 12 வரை தமிழ்படித்து தொடர்ந்தும் பட்டப்படிப்பை படித்துக்கொண்டிருக்கும் செல்வன். றொசான் இராலிங்கம் அவர்கள் பிரான்சு தேசத்தின் சிறந்த பெறியியலாளராக கடந்த சனவரி 26ம் திகதி அவர் உயர் கல்விகற்ற நகரமான Rennes மாநகரத்தில் Rozhan Park மண்டபத்தில் ஆயிரக்கணக்கான பிரெஞ்சு மக்கள் முன்னிலையில் மதிப்பளிக்கப்பட்டிருந்தார்.

2018 ம் ஆண்டு பல்வேறு துறைகளில் கல்வி கற்ற 158 மாணவர்களில் சிறந்த மாணவர்கள் சிலரில் செல்வன். றோசான் அவர்களும் இருந்திருந்தது மிகுந்த பெருமையை தந்திருந்தது. 26ம் நாள் பி.பகல் 14.00 மணிக்கு மண்டபம் கொஞ்சம் கொஞ்சமாக மக்களாலும், பட்டம் பெற்ற மாணவர்களாலும் நிரம்பிக் கொண்டருக்க 16.00 மணிக்கு மதிப்பளிப்பு நிகழ்வு ஆரம்பித்திருந்தது. ஆரம்ப நிகழ்வாக போராசிரியர்கள் பலர் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். எதிர்காலத்தில் சிறந்து விளங்கி தம்தேசத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும் என் வாழ்த்தினர்.

அகரவரிசையில் பெயர்கள் அழைக்கப்பட்டன ஒவ்வொரு மாணவர்களும் தமது உயர்ந்த விருதாகவும் இப்பட்டமளிப்பை உணர்வு பொங்க பெற்றுக்கொண்டனர். பெற்றோர்களும் மிகுந்த சந்தோசத்தில் திழைத்திருந்தனர். இவர்கள் வரிசையில் செல்வன் றொசான் இராசலிங்கம் அவர்கள் அழைக்கப்பட்டார் வழைமையான புன்முறுவலோடு மேடையில் தனக்குரிய சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும் போது மேடையின் அருகே நின்றிருந்த பேராசியர்கள் கூட வந்து பிரத்தியேகமாக வந்து கைகொடுத்து வாழ்த்தியிருந்தனர் காரணம் அவருக்கிடைத்தது இரட்டை (DIPLOME D’INGENIEUR- Grade de master – master’s Degree)பட்டங்களாகும். அன்றைய நாள் அப்பட்டம் சிலருக்கே கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

பெற்றோர்களும் கூடவே இவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கச் சென்றவர்கள் தமது தமிழ்க்கலாசார உடையுடன் சென்றமையால் பத்திரிகையாளர்கள், போட்டோக்கள் எடுப்பவர் அதிகம் இவர்களை படம்பிடித்தனர். றொசானுக்கு கற்பித்த போராசிரியர்கள் பெற்றோரை தேடிவந்து றொசானைப்பற்றியும் பாராட்டிச்சென்றனர். குறிப்பாக இவர் தேர்ச்சிபெற்றகையுடனே அவருக்கு அந்த மாநிலத்தில் மிகப்பெரு தொழில் ஸ்தாபனத்திலும் சிறந்த பொறுப்புள்ள பணிகிடைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த புகழுடன் நிற்க செல்வன் றொசான் போன்று எமது தேசக்குழந்தைகள் பலர் பலஇடங்களில் பட்டங்களைப் பெறுகின்றார்கள் சில தெரியவருகின்றன. சில தெரியவராமலும் போகின்றன. அதற்கு காரணம் சிலர் தம் இனத்தோடும், தன்தாய்மொழியோடு இல்லாமல், மண்ணைவிட்டும், தமது கலைபண்பாடுகளை மறந்தும் போவதேயாகும்;. தமது பிள்ளைகளுக்கு மனதில் ஒரு பகுதியில் அந்த விருப்பம்கூட இருந்தாலும் சில பெற்றோர்கள் அதற்கு ஆதரவு கொடுப்பதேயில்லை அதனை தரக்குறைவாகப் பார்க்கின்ற சமூகமுமாகவே வாழ்ந்து வருகின்றதுடன் தாய்மொழியையும் ஏனைய விடயங்களையும் கற்றுக் கொள்வது தம் பிள்ளைகளுக்கு சுமையாகக் கருதி அவர்களின் விருப்பங்களை முளையிலேயே கிள்ளி விடுகின்றார்கள்.

இந்த வகையிலே தான் செல்வன். றொசானும் அவர்களின் பெற்றோர்களும் மிகுந்த மதிப்புக்குரியவர்களாகின்றனர். “ பெறும் அவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவு அறிந்த மக்கட்பேறு அல்ல பிற ’’ என்ற குறளில் பெறுகின்ற செல்வங்களுள் - அறிவுடைய மக்களைப் பெறுவதைக் காட்டிலும் சிறந்ததாகப் பிற எதையும் நாம் கருதுவதில்லை என்பதற்கமையவும். “ ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தால் செயின் ’’ என்ற குறளில் பொதிந்துள்ள - ஒருவன் தன்னைக் காலமறிந்து, ஏற்ற இடம் அறிந்து ஒரு செயலைச் செய்வானாயின் அவன் இவ்வுலகத்தையே ஆளக் கருதினாலும் அது கைகூடும். என்பதற்கமையவுமே தமிழ்மொழிக்கும், தமிழ்இனத்துக்கும், அதன் உயர்வுக்கும் உயிர் கொடுத்த உன்னதர்களும் பெருமைதந்த செல்வன். றொசான் பிரான்சு மண்ணிலே பிறந்து தாய்மொழிப்பற்றோடும் வளர்க்கப்பட்டவர்.

தமிழ்ச்சோலை ஆண்டு 12 வரை கற்று தான் பொறியியல் கல்வி கற்ற பிரதேசத்தில் வாழும் எம் தேசக்குழந்தைக்கும் தமிழையும், இசையையும் கற்பித்து வருகின்றவர். தொடர்ந்து தமிழ்மூலம் பட்டப்படிப்பினை மேற்கொண்டு வருபவர். அத்துடன் குரலிசை ( சங்கீதம் ) நரம்பு வாத்தியமான ( வயலின் ) போன்றவற்றை முறையாகக் கற்று தரமான கலைஞராக இருப்பவர்.

2013 ம் ஆண்டு தாயக விடுதலைப்பாடல் போட்டி சங்கொலி விருதினை பெற்றவர்.
2017ல் கர்நாடக சங்கீதப்போட்டியின் இசைத்துளிர் விருதினைப் பெற்றுக்கொண்டவர்.
2012 ல் கரோக்கி மூலமான தத்துவப்பாடல் தென்னகத்தாரகை விருதினைப் பெற்றுக் கொண்டவர்.
2016 ல் சங்கீத கலாNஐhதி பட்டத்தையும் பெற்றுக் கொண்டார். பல மேடைகளில் சிறந்த பாடகனாக
சிறப்புப் பாடகனாக இருந்து வருகின்றார்.

இன்னும் அது போதாது என்று பல்கலைக்கழக இளங்கலைமாமணி பட்டப்படிப்பையும் தற்போது மேற்கொண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய பெரிய இலட்சியம், தான் ஒரு கலாநிதி என்ற பட்டத்தை வாழ்நாளில் பெறவேண்டும் அதன் மூலம் என்தாய், தந்தைக்கும் என்னைச் செதுக்கியவர்களுக்கும், எனது மொழிக்கும், மண்ணுக்கும், மக்களுக்கும், புகழுக்கும் பலமாக இருக்க வேண்டும் என்பது என்றும் கூறினார். தனது 22 வயதில் இத்தனை ஒரு திறமைப் பெற்ற எம் தமிழ்ப் பிள்ளையையும், அவருக்கு அல்லும் பகலும் உறுதுணையாய் இருந்த பெற்றோர்களையும் வாழத்தாமல் இருக்க முடியவில்லை. இவர் போல் பற்றுள்ளவர்கள் வரலாறு படைக்க வேண்டும். படைத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள் என்றாலும் அது தமிழர்கள், தமிழ் இனம் என்ற பெருமையை ஏற்படுத்த வேண்டும். இவரும் இவர்போன்றவர்களும் தமிழ் இனத்துக்கு பெருமை சேர்த்து உயர்ந்த இடத்துக்கு சென்று வாழ தமிழ்மக்கள் சார்பாக வாழ்த்துகின்றோம்.