பிரான்சில் பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன் நினைவு சுமந்த . உதைபந்தாட்டப்போட்டி!

வியாழன் அக்டோபர் 07, 2021

 பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறை ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்துடன் நடாத்திய  பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன் நினைவு சுமந்த . உதைபந்தாட்டப்போட்டி நேற்று 03.10.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு கிறித்தல்  ( Parc interrdepartemental des Sprt Paris val de marne 94000 Créteil) மைதானத்தில் நடைபெற்றது.

g

காலநிலை மாற்றத்தால் தொடர் மழைக்கு மத்தியிலும் மாவீரர்களுக்கு மகிமை செய்யும் வகையில் முக்கிய 12 கழகங்கள் பங்கு பற்றிச்சிறப்பித்தன. மாவீரர் நினைவாக ஈகைச்சுடரினை மாவீரரின் சகோதரரான, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு. மகேசு அவர்கள் ஏற்றி வைத்து அகவணக்கம் செலுத்தப்பட்டு சம்மேளனத்தினரால் போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.