பிரான்சில் “புள்ளிகள் கரைந்த பொழுது” நாவல் அறிமுக நிகழ்வு இடம்மாற்றம்!

திங்கள் பெப்ரவரி 17, 2020

ஆதிலட்சுமி சிவகுமார் எழுதிய தாய்நிலத்து தமிழர்களின் பட்டறிவைப் பேசும் “புள்ளிகள் கரைந்த பொழுது” நாவல் அறிமுக நிகழ்வு வரும் 01.03.2020 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 14.00 மணிக்கு பிரான்சு பொண்டி தமிழ்ச்சோலை மண்டபத்தில் நடைபெறவிருந்த குறித்த நிகழ்வு தவிர்க்க முடியாத காரணத்தால் அன்றைய தினம் பொண்டியில் வேறு ஒரு மண்டபத்தில் நடைபெறவுள்ளது என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு மற்றும் ரி.ரி.என் தமிழ் ஒளி தொலைக்காட்சி அழைப்பு விடுத்துள்ளனர்.