பிரான்சில் தமிழ்ச்சோலை ஆசிரியையின் இறுதிவணக்க நிகழ்வு!

திங்கள் ஜூன் 15, 2020

பிரான்சில் கடந்த 05-06-2020 வெள்ளிக்கிழமை சுகயீனம் காரணமாக சாவடைந்த யாழ். சுன்னாகம் ஐயனார் கோவிலைடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Saint-Germain-en-Laye ஐ வதிவிடமாகவும் கொண்ட தமிழ்ச்சோலை ஆசிரியை இராசநாயகம் உதயமாலா அவர்கள் இறுதி வணக்க நிகழ்வு நேற்று 15.06.2020 திங்கட்கிழமை பிரான்சின் 78 ஆம் பிரிவில் இடம்பெற்றது.

இறுதி வணக்க நிகழ்வில் ஆசிரியையின் குடும்பத்தினர் உறவினர்களோடு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு, பிரான்சு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு , தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவை, பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம், தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச் சங்கங்கள், தமிழ்ச் சோலைகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள், தமிழ்ச்சோலைப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள்,பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு நினைவுரைகளை ஆற்றி வணக்கம் செலுத்தினர்.