பிரான்சில் தமிழ்க் கலைத் தேர்வு – 2020 இம்முறை நடைபெறமாட்டாது!

சனி ஜூன் 27, 2020

பிரான்சில் ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடிச் சூழ்நிலை காரணமாக, இங்குள்ள நிலைமைகளைக் கருத்திற் கொண்டு  தமிழ்க்கலைத் தேர்வு 2020 (எழுத்துத் தேர்வு , ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு)  இவ்வாண்டு நடாத்துவதில்லை என்று தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் முடிவெடுத்துள்ளது.
இதனால் ஏற்படக்கூடிய இடர்களுக்காக வருந்துகிறோம் எனத் தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகத்தின் கலைப்பிரிவு தெரிவித்துள்ளது.

பிரான்சு தேசத்தில் வாழும் தமிழ்க்கலை மாணவர்களுக்கு தமிழ்ச்சோலை தலைமைப்பணியகம் ஆண்டு தோறும் ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு மற்றும் தமிழ்க் கலை எழுத்துத் தேர்வு ஆகிய தேர்வுகளை அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத்தின் (ITTA ) ஆதரவுடன் நடாத்திவருகின்றமை தெரிந்ததே.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு – ஊடகப்பிரிவு)