பிரான்சில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற கப்டன் கஜன் லெப்.கேணல் நாதன் ஆகியோரின் 23 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு!

ஞாயிறு அக்டோபர் 27, 2019

தாயக விடுதலைக்காக புலம்பெயர் நாடுகளில் செயற்பட்டவேளை 26.10.1996 அன்று பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வைத்து சிறிலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிதிப்பொறுப்பாளர் லெப்.கேணல் நாதன் மற்றும் ஊடகப்போராளியும் ஈழமுரசின் நிறுவக ஆசிரியருமான கப்டன் கஜன் ஆகியோரின் 23 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நேற்று 26.10.2019 சனிக்கிழமை அன்று பாரிசில் பந்தன் பகுதியில் அவர்களின் நினைவுக் கல்லறையில் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றது