பிரான்சில் வைத்திய பட்டப்படிப்பினை மேற்கொண்ட யுவதிகள் கொலை

திங்கள் சனவரி 18, 2021

பிரான்சில் வைத்திய பட்டப்படிப்பினை மேற்கொண்டு வந்த யுவதிகள் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.குறித்த யுவதிகள் காதல் விவகாரங்களினால் அவர்களின் காதலர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழம் , யாழ்ப்பாணம் ஆலம்பிட்டி பகுதியை சேர்ந்த 20 வயதுடைய கார்த்திகா என்ற யுவதி அவரின் காதலரின் கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.யாழ் மண்டுவில் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய ஸ்நேஹா என்ற யுவதி அவரின் காதலனால் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர்களின் புகைப்படங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர்களை கைது செய்ய பிரான்ஸ் நாட்டு காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.​