பிரான்சு அல்போவில் மற்றும் இவ்றி பகுதிகளில் தமிழினப் படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வுகள்

ஞாயிறு மே 26, 2019

பிரான்சு பாரிசின் புறநகர் பகுதிகளில் ஒன்றான ஆல்போர்வில் நகரசபை முன்றலில். பிராங்கோ தமிழ்ச் சங்கம் ஆல்போர்வில், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழீழ மக்கள் பேரவை, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு  ஆகியவற்றோடு இணைந்து கவனயீர்ப்பை ஏற்பாடுசெய்திருந்தது.

f

நேற்று 25.05.2019 சனிக்கிழமை காலை10மணிமுதல். மதியம்13 மணிவரை குறித்த கவனயீர்ப்பு தமிழினவழிப்பு கண்காட்சியாக நடைபெற்றது.

f

பெரும் எண்ணிக்கையான வெளிநாட்டவர்கள் முன்வந்து எமது போராட்டத்தின் நிலைப்பாட்டைக் கேட்டு; தெரிந்துகொண்டனர். அவரஇ;களுக்கான பிரெஞ்சு மொழித்துண்டுப்பிரசுரமும் கையளிக்கப்பட்டது.

f
இந்நிகழ்வில் உதவிநகரபிதா அவர்களும் கலந்துகொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார்.  

f

இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை (27.05.2019) நகரசபை முதல்வர் இதுதொடர்பாக சந்திப்புஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.

f