பிரான்சு சேர்ஜிப்பகுதியில் இடம்பெற்ற தைப்பொங்கல் திருவிழா!

ஞாயிறு சனவரி 26, 2020

பிரான்சில் சேர்ஜி சிவன்கோவில் நிர்வாக சபையினால் ஏற்பாடுசெய்யப்பட்ட பொங்கல் திருவிழா இன்று 26.01.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு மிகவு சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வில் கலாசார உடையோடு அப்பகுதி மக்கள் கலந்துகொண்டிருந்தமை நிகழ்வை மேலும் சிறப்பாக்கியது.

அத்தோடு சேர்ஜி மாநகரசபையின் முன்னாள் நகரபிதா Mr.Dominique Lefebvre மற்றும் தற்போதைய துணைநகரபிதா Mr.Moussa Diarra ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் பாரம்பரிய கலை நிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றிருந்தன.