பிரான்சு கிளிச்சி பகுதியில் மே 18 தமிழினப் படுகொலை நினைவேந்தல்!

வியாழன் மே 19, 2022

பிரான்சில் நேற்று 18.05.2022 காலை 11.00 மணிக்கு கிளிச்சி நகரில் பிரான்சு பட்டினிக்கு எதிரான அமைப்பின் உறுப்பினர்கள் மூதூரில் 2006 படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபிக்கு முன்பாக மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் இடம்பெற்றது.

கிளிச்சி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடர் மற்றும் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

பொதுச்சுடரை பரராஜசிங்கம் (கிளிச்சி தமிழ்ச் சங்க உப தலைவர்) அவர்களும், ஈகைச்சுடரை கண்ணதாசன் ( கிளிச்சி தமிழ்ச் சங்க பொருளாளர்) அவர்களும் ஏற்றிவைக்க மலர்வணக்கத்தை M.STÉPHAN COCHEPAN (PREMIER MAIRE ADJOINT- ville de Clichy) செலுத்தியிருந்தார்.

தொடர்ந்து,

M. Richard Vince(Conseiller municipal), Monde Combattant – Devoir de mémoire, M.ALCIATOIR (Conseiller municipal Ville de Clichy), M.DIOP LYON (PRÉSIDENT OFFICE INTER NATIONAL EUROPEAN), MME. HAJAT (MEMPRE DE ASSOCIATION CLICHY) ஆகியோர் கலந்துகொண்டு மலர்வணக்கம் செலுத்தினர்.

இவர்களோடு, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள், தமிழ்ச்சோலை உறுப்பினர்கள், சங்கத் தலைவர்கள்,நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கிழிச்சி வாழ் தமிழ் மக்கள் கலந்து கொண்டு மலர்வணக்கம் செலுத்தியிருந்தனர்.

நினைவுரையினை செயற்பாட்டாளர் திரு.பாலசுந்தரம் அவர்கள் ஆற்றியிருந்தார்.

நன்றியுரையினை கிளிச்சி பிராங்கோ தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர் திரு. க.சச்சிதானந்தம் (சச்சி) அவர்கள் ஆற்றியிருந்தார்.

நிறைவாக தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.