பிரான்சு லாக்கூர்நொவ் நகரில் மே18 நினைவேந்தல்!

செவ்வாய் மே 19, 2020

பிரான்சு லாக்கூர்நொவ் நகரில் லாக்கூர்நொவ் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் 18 முள்ளிவாய்க்கால் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் பிரெஞ்சு அரசின் (கோவிட் 19) சட்டதிட்டங்களுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில்  18.05.2020 திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதைத்தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. அகவணக்கத்தைத் தொடர்ந்து மலர்வணக்கமிடம்பெற்றதையடுத்து அனைவரும் சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.

இந்நிகழ்வில் லாக்கூர்நொவ் மாநகரசபை நகரபிதா உள்ளிட்ட உறுப்பினர்கள், பிரான்சு பாராளுமன்றத்தில் Seine Seine Denis பிரதேசத்தின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றத்தில் தமிழ்மக்களின் ஆதரவு குழுவின் தலைவருமான Mme Marie George Buffet அவர்களும்் கலந்து கொண்டு சுடர் ஏற்றிவைத்து மலர் வணக்கம் செலுத்தியிருந்தனர்.

நினைவு உரையை பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை பொறுப்பாளர் திரு.திருச்சோதி அவர்கள் ஆற்றியிருந்தார்.