பிரான்சு லாக்கூர்நொவ் தமிழ்ச்சோலைப் பள்ளியின் வருடாந்த பொங்கல் விழா

வெள்ளி சனவரி 31, 2020

பிரான்சு லாக்கூர்நொவ் தமிழ்ச்சோலைப் பள்ளியின் வருடாந்த பொங்கல் விழா கடந்த 25.01.2020 அன்று சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்ச்சோலை நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் தமிழர் கலாசார உடையோடு கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

லாக்கூர்நொவ் மாநகரசபை உறுப்பினர் அந்தோனி றுசெல் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்.