பிரான்சு மாநகரசபைத் தேர்தல் - கட்சிகளின் வெற்றியில் பங்கெடுத்த தமிழர்கள்!

சனி ஜூலை 04, 2020

பிரான்சில் நடைபெற்று முடிந்த மாநகரசபைத் தேர்தல் 2020 இல் பல்வேறு கட்சிகள் பங்குபற்றியிருந்தன. வலது, இடது சாரிக்கட்சிகளும் மற்றும் கம்னியூஸ்ட், பசுமைக்கட்சி போன்ற கட்சிகளும் பங்கு கொண்டன. இக்கட்சிகளின் வெற்றிக்காக பல தமிழர்களின் வாக்குகளும் காலத்தின் அவசியமாகக் கருதப்பட்டதால் தமது வேட்பாளர் தேர்வில் தமிழர்களும் இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தனர்.

இவ்வாறு இணைந்த கட்சிகளில் பலர் தெரிவாகவில்லை. சிலர் தெரிவாகியிருந்தனர்.

இம்முறை கொரோனா பிரச்சினை காரணமாக பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்கவில்லை எனத் தெரியவருகிறது.

இதன் காரணமாகவே பல கட்சிகள் வெற்றியை எட்டமுடியாமல் போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாரிசின் புறநகர் பகுதியில் தமிழர்கள் 15 பேர் குறித்த கட்சிகளுக்கு ஆதரவாகப் பங்கு பற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களில் கட்சிகளின் சார்பில் மாநகர சபைகளின் ஆலோசகர்களாகத் தெரிவாகிய எம்மவர்களின் விபரங்கள் வருமாறு :-

    புளோமினல் மாநகரசபைக்கு திரு. கிங்ஸ்ரன்
    பொண்டி மாநகரசபைக்கு செல்வி பிரபாகரன் பிறேமி
    லாக்கூர்னோவ் மாநகரசபைக்கு திருமதி அகிலன் யாழினி
    பொபினி மாநகரசபைக்கு திரு.பொன்னுத்துரை நந்தகுமார்
    செவ்ரோன் மாநகரசபைக்கு செல்வி ரட்ணதுரை சிறோமி
    ஆர்ஜெந்தெய் மாநகரசபைக்கு திரு.பொன்னுத்துரை சிவகுமார்
    கார் லே கோணேஸ் மாநகரசபைக்கு செல்வி அன்ரன் இமானுவேல் டிவினா நாயகி.
    நியூலிசூர்மாறன் மாநகரசபைக்கு செல்வி.மதுமிதா கலாதாசன்

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஊடகப்பிரிவு )