பிரான்சு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஈழத் தமிழர் மாநாடு!

திங்கள் ஏப்ரல் 15, 2019

12.04.2019 வெள்ளிக்கிழமைபிரான்சு நாடாளுமன்றத்தில் 10 ஆண்டுகள் முடிந்தநிலையில் சிறிலங்காவில் தமிழர்களின் நிலமை என்னும் தலைப்பில் பிரான்சு நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்ட  ஈழத்தமிழர்நலன்காப்பு குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டு மதியம் 14.30 மணிக்கு ஆரம்பமானது. 13.30 மணிக்குமாநாட்டில் பங்குபற்றுகின்றவர் உள்நுழைய அனுமதிக்கப்பட்டனர்.

14.30 க்கு இக்குழுவின் தலைவியும் ,முந்நாள் நாடாளுமன்றஉறுப்பினருமாகிய Mmme. Marie–Georg Buffet  அவர்கள் ஆரம்பித்துவைத்துமக்கள் பேரவையின் பொறுப்பாளரும் அனைத்துலக மக்கள் பேரவைப் பேச்சாளருமாகிய திரு.திருச்சோதி அவர்கள் அகவணக்கத்தைதொடக்கிவைக்க,தொடர்ந்து இளையோர் அமைப்பின் செயற்பாட்டாளர் செல்வன் நிந்துலன்  இன்றையமாநாட்டைவழிநடத்தினார். திரையில் சிறிலங்காவில் நடைபெற்ற இனஅழிப்பின் 10ஆண்டுகளின் பின்னரான நிலைப்பாடும், புலம்பெயர் நாடுகளின் தமிழர்களின் சனநாயகஅரசியல் ரீதியான போராட்டங்கள், தமிழரின் பூர்வீக சரித்திரம் பற்றியதொரு ஆவணம் ஒளிபரப்பப்பட்டது.

தொடர்ந்துடாக்டர்.செல்வி. சாருகாதேவகுமார்அவர்களின் நீதிக்கானமாற்று ஆய்வுக்கட்டுரை இடம் பெற்றது. தொடர்ந்து தாயகத்தில் இருந்துவருகைதந்திருந்ததிரு. விஐயகுமார்நவநீதன் அவர்கள் தமிழ்ழும் அவர்களின பூர்வீக நிலமும் என்றதலைப்பில் அனைத்துநிழற்படத்தரவுகளுடன் தெளிவுபடுத்தியிருந்தார். 

தொடர்ந்துநாடுகடந்தஅரசின் சார்பாகஉறுப்பினர் திரு மகிந்தன் சுப்பிரமணியம் அவர்கள் பிரெஞ்சு மொழியில் ஆற்றியிருந்தார். அவரைத் தொடர்ந்து மூத்ததமிழின உணர்வாளர் ஐயா இக்பால் மொகமட்  அவர்கள் தனது ஆய்வுக் கருத்தை ஆற்றியிருந்தார். 

முஸ்லீம்  மக்களாக நாம் மதத்தால் தான் தாம் வேறுபட்டவர்கள் என்றும் மொழியால் நாம் தமிழ்மக்கள் என்பதையும், கடந்த 71 வருடங்களுக்குமேலாகபெருமான்மையானசிங்களவர்களால் தமிழர் ,தமிழ்மொழி  பேசுகின்றவர்கள்  என்பதால் இனப்படுகொலைக்கு உள்ளாகின்றோம் என்றார்.

அவரைத் தொடர்ந்து  சுரேசு தர்மலிங்கம் கிழக்குமாகாணத்திலிருந்துவருகைதந்ததுடன் கிழக்குமக்களின் போருக்குபின்னான அவலங்களைதெரிவித்திருந்தார்.அவரைத் தொடர்ந்துசுவிசுநாட்டின் பிரசையும் தமிழர் தாயகப் பகுதிக்குச்  சென்றுபலநாட்கள் தங்கிதமிழர்களின் நியாயமான சனநாயக வழியிலான போராட்டங்களையும், அகபரிக்கப்பட்ட தமிழர் நிலங்கள் பற்றியஆவணத்தை நிழற்படங்களோடு காட்சிப்படுத்தி உரையும் ஆற்றியிருந்தார். 

அவரைத் தொடர்ந்து ஸ்ராஸ்புக்  ஐரோப்பியதமிழர்ஒன்றியத்தின் உறுப்பினர்திருமதி. கிருபாகரன் அவர்கள் உரையாற்றினார் .  அவரைத் தொடர்ந்து தமிழர்மனிதவுரிமைகள் அமைப்பின் பொறுப்பாளர் திரு.ச.வே.கிருபாகரன்  அவர்கள்  பிரெஞ்சுமொழியில் உரையாற்றியிருந்தார்.  இளையவர்களின் எதிர்காலநிலைப்பாடு சம்பந்தமாக செல்வன் . பிரசன்னா சுந்தரசர்மாஅவர்கள் உரையாற்றியிருந்தார். 

தொடர்ந்துநோர்வேநாட்டிலிருந்துவருகைசர்வதேசமக்கள் பேரவைஆலோசனைஉறுப்பினர்தந்ததிரு. ஸ்ரீபன் அவர்கள் அன்றையநிகழ்வின் தொகுப்பைமேற்கோள்காட்டிஉமையாற்றினார். தொடர்ந்துமக்களிடம் கேள்விகளுக்கு விடப்பட்டது. அதற்கான பதில்களை தாயகத்திலிருந்து வந்தவர்களும் புலம்பெயர் வேலைத்திட்டங்களில் ஈடுபடுவோர் வழங்கியிருந்தனர்.

இறுதியாகசபையின் தலைவர்  Mmme. Marie–Georg Buffet   அவர்கள் பதிலளித்திருந்தார். போருக்குப் பின்னான 10 வருடகாலத்தில் சிங்களதேசம் தமிழ்மக்களின் வாழ்வில், கல்வியில், பொருளாதாரத்தில் இதயசுத்தியுடன் எந்தஆக்கபூர்வமானசெயற்பாட்டைச் செய்யவில்லை என்பதை காண்பதோடு தன்னுடைய செயற்பாட்டை தொடர்ந்து தமிழ்மக்களுக்காகஆற்றுவேன் என்றகருத்துக்கள் பலவற்றைவழங்கினார். இதன் பின்னர் இறுதிநேரத்தில் வந்து கலந்துகொண்ட  95 மாவட்டத்தின்  நாடாளுமன்றஉறுப்பினர்திரு. பொப்பின் அவர்களும் உரையை தமிழ் மக்களுக்கு சார்பாகவும் ஆற்றியிருந்தார்.

இந்தமாநாட்டில் பலகட்டமைப்புக்களைச்சேர்ந்தவர்கள்,ஐ.நா. பணிமனைச் செயற்பாட்டாளர்கள் ,வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், இளையோர்கள், சங்கங்களை சேர்ந்தவர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள்  கலந்துகொண்டனர். மாலை 7.00 மணிக்குமாநாடுநிறைவுக்குவந்தது.

s