பிரான்சு திரான்சி (Drancy) நகரசபையில் தமிழீழ மக்களுக்கு ஆதரவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஞாயிறு பெப்ரவரி 14, 2021

பிரான்சு பாரிஸ் நகரை அண்மித்த நகரங்களில் ஒன்றான திரான்சி (Drancy) நகரின் நகர சபையினால் 11.02.2021 வியாழக்கிழமை அன்று ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதராவான தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானத்தில், இலங்கையில் நடைபெற்றது தமிழினப் படுகொலை என்றும், இனப்படுகொலை செய்த இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றதில் நிறுத்தப்பட்டு அனைத்துலக சுயாதீன விசாரணை நடாத்தப்பட வேண்டும் எனவும், இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு தனித் தமிழீழம் தான் இறுதியானதும் உறுதியான தீர்வாக இருக்கமுடியும் போன்ற பல வீடயங்களை உள்ளடக்கிய தீர்மானம் திரான்சி நகரசபையின் முதல்வர், பிரதி முதல்வர்கள் நகரசபை உறுப்பினர்கள் போன்றோரின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் தமிழ் பாண்பாட்டு வலையம் சார்பாக திரான்சி நகரசபை முதல்வரிடம் முன் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு ஏற்றபவே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழீழத்திற்கான பயணங்கள் தொடரும்

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

தமிழ் பண்பாட்டு வலையம்