பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பின் மாவீரர் நினைவு சுமந்த கவிதை உருவாக்க முயற்சி!

புதன் நவம்பர் 11, 2020

 மாவீரர் நாளை முன்னிட்டு பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினர் “பெருந்தாகமும் சிறுதாகமும்” எனும் தலைப்பில் மாவீரர் நினைவு சுமந்த புகைப்பட கவிதை உருவாக்க செயற்பாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த முயற்சியின் பயனாக இளையோர்கள் மத்தியில் மாவீரர் பற்றிய சிந்தனைகளை விதைப்பதுடன், கவிதை உருவாக்கும் திறனை ஊக்கிவிப்பதே தமது நோக்கம் என பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த புகைப்படத்தைக் கருப்பொருளாகக் கொண்டு உங்கள் கவிதைகளை எழுதி அனுப்பிவையுங்கள்.
கவிதைகள் தமிழ்,பிரெஞ்சு அல்லது ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழதப்படவேண்டும்.

கவிதைகள் நவம்பர் 22 இற்குமுன் அனுப்பிவைக்கவேண்டும்.

உங்கள் கவிதைகளை மின்னஞ்சல் (tyocontact@gmail.com) மூலம் அனுப்பிவைக்கவும்.
தெரிவுசெய்யப்படும் கவிதைகள் நவம்பர் 27 மாவீரர் நாள் அன்று ஒலி – ஒளி வடிவில் வெளியிடப்படும்.
எனவும் பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.