பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினரின் கறுப்பு யூலைப் பிரச்சாரம்!

திங்கள் ஜூலை 20, 2020

பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினர் கறுப்பு யூலை தமிழினப்படுகொலை நினைவை முன்னிட்டு சமூக இணைய ஊடகங்களில் கறுப்பு யூலை தொடர்பான அடையாளப்படுத்தல்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் தமது பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு முகநூலில் அவர்கள் பிரெஞ்சு மொழியில் பின்வருமாறு பதிவிட்டுள்ளனர்.

எங்கள் சுயவிவரப் படத்தை மாற்றுவதன் மூலம் கறுப்பு யூலை நிகழ்ச்சிகளை நினைவுகூர முடிவு செய்தோம். * நீங்களும், இந்த விடயத்தை முன்னிலைப்படுத்த உதவுங்கள், இந்த வன்முறைத் தாக்குதலின் நோக்கம் பற்றி அறிந்திருப்போம். தமிழ் மீது தாகமாக இருப்போம்.