பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் கண்ணீர் வணக்கம்!

புதன் ஜூன் 23, 2021

பொபினி நகரிலே அமைந்துள்ள தமிழ்ச்சோலையின் நிர்வாகியாக 2009 ஆம் ஆண்டில் பொறுப்பேற்று, அயராது செயலாற்றிக்கொண்டிருந்த அமுதராணி நந்தகுமார் அவர்களின் மறைவுச் செய்தியறிந்து திகைத்து நிற்கின்றது தமிழ்ச்சோலைச் சமூகம். 

தமிழின் மீதும் தமிழ் மக்கள் மீதும் கொண்ட பேரன்பினால், தன் உடல்நலக்குறைவையும் பொருட்படுத்தாது தளராது பணிதொடர்ந்த இவர், தன் இனிய பண்பினால் மாணவர்கள் உட்பட அனைவரதும் இதயத்தில் இடம்பிடித்த பண்பாளர்.

புலம்பெயர் வாழ்வில் எம் இனம் தன் மொழியையும் கலைகளையும் பண்பாட்டையும் தொலைத்துவிடக்கூடாது என்ற உயர்சிந்தனையுடன் அர்ப்பணிப்புடன் இறுதிவரை உழைத்த இவருக்குத் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தனது கண்ணீர் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.