பிரான்சு ஊடகமையம் பணிமனையில் இடம்பெற்ற தியாக தீபம் நினைவேந்தல்!

வியாழன் செப்டம்பர் 24, 2020

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 33 ஆம் ஆண்டின் 9 ஆம் நாள் நினைவேந்தல் நேற்று (23.09.2020) புதன்கிழமை மாலை 18.00 மணிக்கு பிரான்சு ஊடகமையத்தின் பணிமனையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கோவிட் 19 சட்டதிட்டங்களுக்கு அமைவாக முகக் கவசம் அணிந்து கலந்துகொண்ட அனைவரும் தியாக தீபத்திற்கு சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், மலர் வணக்கம் செலுத்தியிருந்தனர். நினைவுரைகள், கவிதை என்பனவும் இடம்பெற்றன.

ஊடகமையம் – பிரான்சு.