பிரான்சு வாழ் மாவீரர் பெற்றோர் உடன்பிறந்தோரே!

சனி அக்டோபர் 05, 2019

தமிழீழ தேசத்தின் அற்புத தெய்வங்களான மாவீரர்களின் புனிதத் திருநாளான தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2019 தமிழீழத்திலும், புலத்திலும் தமிழீழ மக்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் உணர்வுபூர்வமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.


பிரான்சில் தமிழர் ஒருங்கணைப்புக்குழு ஏற்பாட்டில் பாரிசில் எதிர் வரும் நவம்பர் மாதம் 27 ஆம் நாள் புதன்கிழமை  நடைபெறவுள்ள தமிழீழத் தேசிய மாவீரர் நாளில் வழமைபோன்று மாவீரர் திருவுருவப் படங்களுக்கு சுடர் ஏற்றி வீர வணக்கம் செலுத்தப்படவுள்ளது.

இந்த வணக்க நிகழ்வில் தங்கள் பிள்ளைகள் சகோதரர்களாகிய மாவீரர்களின் திருவுருவப்படங்களை இதுவரை வழங்காதவர்கள் எதிர்வரும் நவம்பர் 15 ஆம் (15-11-2019) நாளுக்கு முன்பாக படங்களையும் விபரங்களையும் எம்மிடம் தந்துதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


மாவீரர் பணிமனை – பிரான்சு 
06 27 07 78 52 
மேலதிக தொடர்புகளுக்கு:- 
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு
01 43 15 04 21 – 06 14 11 46 10
மின்னஞ்சல் :-   maaveerarpanimanai.fr@gmail.com