பிரான்சு வாழ் தமிழீழ மக்களுக்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விடுக்கும் அவசர அறிவித்தல்!

ஞாயிறு மார்ச் 15, 2020

சர்வதேச நாடுகளிலும், ஐரோப்பிய மற்றும் பிரான்சு நாட்டிலும் அதிகரித்து வரும் கொரோனா வைரசு பரவல் காரணமாகவும்,

  பிரான்சு நாட்டின் சனாதிபதி அவர்கள் 12.03.2020 ( நேற்றையநாள்)  நாட்டு மக்களுக்காக விடுத்திருக்கும் அவசரகால கட்டளைக்கு மதிப்பளித்தும், மக்களின் நலனில் கவனம் கொண்டும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவாலும் அதன் உப கட்டமைப்புக்களாலும் நடாத்தப்படவிருந்த அனைத்து நிகழ்வுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன என்பதையும் அறியத்தருவதுடன்,

  பிரான்சு நாடானது விடுத்திருக்கும் அவசர வேண்டுகோளையும், அறிவுறுத்தல்களையும் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்வதுடன்,  ஒவ்வொரு தமிழர்களும் குமுகாய அக்கறையோடு தம்மைத்தாமே தயார்படுத்திக்கொள்வது காலத்தின் அவசியமாகும் என்பதையும் வலியுறுத்தித் தெரிவித்துக்கொள்கின்றோம்.

– தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு