பிரான்சு வான்பரப்பில் மீண்டும் சஹாரா தூசிப் படலம்!

செவ்வாய் பெப்ரவரி 23, 2021

சஹாராவில் இருந்துவரும் மணல் தூசிப் படலம் (Saharan dust) மீண்டும் பிரான் ஸின் பல பகுதிகளிலும் வான் பரப்பில் கலந்து காணப்படுகிறது. நேற்றும் தொடர்ந்து இன்றும் இது அவதானிக் கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்படுகிறது.

சில வாரங்களுக்கு முன்னரும் இத்தகைய வளிமண்டலப் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

ஆபிரிக்காவின் சஹாரா பாலைவனத் தில் இருந்து மணல் துகள்களை அள்ளி வருகின்ற காற்று மத்தியதரைக் கடலைக் கடந்து ஐரோப்பிய வான்பரப்பில் கலக்கின்றது. இதனால் காலை வேளைகளில் வானம் செம்மஞ்சள் மற்றும் செவ்வாய்க் கிரகத்தின் சிவப்பு வர்ணத்தை ஒத்த நிறங்களில் காட்சி கொடுக்கின்றது.

வளி பெரிதும் மாசடைந்திருப்பதால் Pyrénées-Atlantiques பிராந்தியத்தில் பொது மக்களுக்கு மாசு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. தரையிலும் ஜன்னல்கள் மற்றும் வாகனங்கள் மீதும் சஹாரா மணல் தூசு படிவத்தை அவதானிக்க முடியும் என்று தெரிவிக் கப்படுகிறது.

மாஸ்க் அணிவதன் மூலம் தூசியால் ஏற்படுகின்ற பாதிப்பைத் தவிர்த்துக் கொள்ள முடியும் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.