பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி தொலை பேசியில் பேச்சு!

செவ்வாய் செப்டம்பர் 21, 2021

ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலை உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் இருவரின் பேச்சுவார்த்தையில் இடம்பெற்ற முக்கியம்சங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் மோடி இன்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை தொலை பேசியில்;  தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இருவரும் ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலை, போதைப்பொருள், தீவிரவாதம், பெண்கள் உரிமை, சிறுபான்மையினர் பிரச்சினை குறித்த கவலை போன்றவை குறித்து விவாதித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இருநாட்டின் ஒத்துழைப்பு குறித்து ஆய்வு செய்தனர். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இருநாட்டின் ஆலோசனைகள் அப்படியே நீட்டிக்க இருவரும் ஒப்புக்கொண்டனர்.