பிரான்ஸ் நிலை; தொடரும் உள்ளிருப்புச் செயற்பாட்டினால் கட்டுப்பாட்டுக்குள் வரும் கொரோனா

ஞாயிறு நவம்பர் 22, 2020

பிரான்ஸ் நாட்டில் உள்ளிருப்பு நடவடிக்கை கொரோனாவைக் கட்டுப்படுத்தி வருகிறது.

பிரான்ஸில் கொரோனா இரண்டாவது அலை இப்பொழுது சிறிது சிறிதாக குறைவடைந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவடைகிறது.

5-வது நாளாக நேற்று தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை குறைவடைந்திருப்பதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று சனிக்கிழமை 24 மணி நேரத்தில் 276 பேர் வைத்தியசாலைகளில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

48518 பேர் கொரோனா ஆரம்பித்த காலத்திலிருந்து நேற்று வரை பிரான்ஸில் உயிரிழந்துள்ளார்கள்.

4039இடங்கள் கொரோனா தொற்று இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 1539 இடங்கள் முதியோர் இல்லங்கள்.

100 மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைவடைந்துள்ளன.

பிரான்ஸ் சுகாதாரத் திணைக்களம் தனது கடமைகளைச் செய்து வருகின்றது.

4494 பேர் இப்பொழுது தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று 24 மணித்தியாலங்களில் 220 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.

31365 பேர் இப்பொழுது கொரோனா காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

17881 பேர் நேற்று 24 மணி நேரத்தில் பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.