பிரான்ஸ் புதிய மாதம்! புதிய மாற்றங்கள்! சாதகமா? பாதகமா?

புதன் செப்டம்பர் 01, 2021

எரிவாயு!

எரிவாயுவின் விலை குறிப்பிடத்தக்க அளவு விலையேற்றம் காண்கிறது. தொடர்ச்சியான ஐந்தாவது மாதமாக இந்த விலையேற்றம் காண்கின்றது. இன்று முதல் எரிவாயுவின் விலை 8.7& வீதத்தால் அதிகரிக்கின்றது. இவற்றில் சமையலுக்காக மாத்திரம் எரிவாயு பயன்படுத்துவோருக்கு 2.7% வீதமும், சமையல் மற்றும் வெந்நீருக்காக எரிவாயு பயன்படுத்துவோருக்கு 5.5% வீதமும், சமையல், வெந்நீர் மற்றும் வெப்பமூட்டிகளுக்காக எரிவாயு பயன்படுத்துவோருக்கு 9% வீதமும் விலை அதிகரிக்கின்றது.

மே : 1.1%
ஜூன் : 4.4%
ஜூலை : 10%
ஓகஸ்ட் : 5.5%

வீதம் என கடந்த நான்கு மாதங்களாக விலை அதிகரித்து தற்போது ஐந்தாவது மாதமாக இன்றும் விலை அதிகரிக்கின்றது.

சிகரெட் விலை!!

சில குறிப்பிட்ட நிறுவன சிகரெட் பெட்டிகளின் விலை குறைவடைகின்றது.
Lucky Strikes மற்றும் Gauloises Blondes சிகரெட் பெட்டிகளின் விலை பத்து சதத்தால் குறைவடைந்து தற்போது 9.90 யூரோக்களுக்கு (பழைய விலை 10 யூரோக்கள்) விற்பனையாகின்றது.
Camel Filters மற்றும் Essential ஆகிய இரு சிகரெட்டுகளும் 20 சதம் குறைந்து 10 யூரோக்களுக்கு (பழைய விலை 10.20 யூரோக்கள்) விற்பனையாகின்றன.

பகுதிநேர வேலையிழப்பு!

பகுதி நேர வேலையிழப்பை சந்தித்தவர்களுக்கான இழப்பீடு குறைக்கப்படுகின்றது. இன்று செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் இந்த இழப்பீடு மொத்த சம்பளத்தில் இருந்து 60% வீதமாக குறைகின்றது.

télétravail..!!

கொரோனா காலத்தில் வீட்டில் இருந்து வேலை பார்த்தவர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது. வருடத்துக்கு 220 யூரோக்கள் எனும் கணக்கில் இந்த தொகை வழங்கப்பட ஆரம்பிக்கப்பட உள்ளது. இணைய கட்டணம், மின்சாரம், அறை வெப்பமூட்டி போன்ற காரணங்களுக்காக இந்த தொகை வழங்கப்பட உள்ளது.

இன்று செப்டம்பர் 1 ஆம் திகதியில் இருந்து டிசம்பர் 31 ஆம் திகதி வரை télétravail இன் கீழ் வேலை செய்பவர்களுக்கு இந்த மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.

சிறுவர்களுக்கான கொடுப்பனவு!

இன்று செப்டம்பர் 1 ஆம் திகதி முதல், 6 தொடக்கம் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு club de sport அட்டைகளை பெற 50 யூரோக்கள் வரை குறைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழந்தைக்கும் இந்த கட்டணம் தனித்தனியே குறைக்கப்படுகின்றது.

5.4 மில்லியன் சிறுவர்கள் இந்த கட்டணக்குறைப்பை பெற உள்ளனர்.

தடுப்பூசி நிலையங்களுக்கான போக்குவரத்து..!

தனியே தடுப்பூசி நிலையங்களுக்குச் செல்ல முடியாதவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கொடுப்பனவு நிறைவுக்கு வந்துள்ளது. இதுவரை காலமும் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் வழங்கப்பட்டு வந்த போக்குவரத்துக்கான செலவு, இன்றோடு நிறுத்தப்பட்டுள்ளது.


நெட்ஃபிளிக்ஸ்!

நெட்ஃபிளிக்ஸ் மாதாந்த கட்டணம் இன்று முதல் அதிகரிக்கின்றது. 7.99 யூரோக்கள் கொண்ட பக்கேஜ் தற்போது 8.99 யூரோக்களாக அதிகரிக்கின்றது. 11.99 யூரோக்கள் கொண்ட பக்கேஜ் தற்போது 13.49 யூரோக்களாக அதிகரிக்கின்றது. மேலும் 15.99 யூரோக்கள் கட்டணம் கொண்ட பக்கேஜ் இன்று முதல் 17.99 யூரோக்களாக அதிகரிக்கின்றது.