பிரான்ஸ் ஊடகமையத்தில் மாவீரர்நாள் நிகழ்வுகள்!

திங்கள் நவம்பர் 30, 2020

பிரான்ஸ் ஊடக மையத்தில் கடந்த 27 நவம்பர் அன்று மாவீரர்நாள் நிகழ்வுகள் எழுச்சியுடன் இடம்பெற்றன. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 2008ம் ஆண்டு மாவீரர்நாள் உரையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

பொதுச்சுடரினை இந்திய இராணுவத்துடன் 03.07.1988 அன்று இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.மரியா அவர்களின் சகோதரரும், ஊடக மையத்தின் தலைவருமான திரு. சுமந்திரன் அவர்கள் ஏற்றி வைத்தார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து, துயிலும் இல்லப் பாடல் ஒலிக்க கலந்துகொண்டவர்களால் சுடர்வணக்கம் மற்றும் மலர் வணக்கம் இடம்பெற்றது.