பிரான்ஸில் இருந்து வந்த மில்லியன் பெறுமதியான போதைப் பொருள்

சனி ஜூலை 11, 2020

பண்டாரநாயக்க விமான நிலையத்தில் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான மெத்தம்பேட்டமைன் எனப்படும் ஐஸ் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொழும்பு கார்கோ எக்ஸ்பிரஸ் என்ற நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட சந்தேகத்திற்கிடமான விமான அஞ்சல் பொதியில் இந்த போதைப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,

குறித்த அஞ்சல் பொதியில் சூட்சுமான முறையில் பொலிதீன் பைகளில் மறைத்து வைக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட 5716 மெத்தாம்பேட்டமைன் மாத்திரைகளே இவ்வாறு கைப்பற்றப்பற்றுள்ளன.

இந்த அஞ்சல் பொதி கொழும்பு – புதுக்கடை பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு பரிசாக பிரான்சிலிருந்து அனுப்பப்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து விமான நிலையத்தில் உள்ள சுங்க அதிகாரிகள் சந்தேகநபரை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.