பிரான்ஸில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!

ஞாயிறு சனவரி 10, 2021

 பிரான்ஸில் ஒரே நாளில் 20,000க்கும் அதிகமானவர்கள் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 20,177 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனா பாதிப்பு எண்ணிக்கை 27,67,312 ஆக அதிகரித்துள்ளது. 67,599 பேர் கொரோனோவுக்கு பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் கடந்த சில நாட்களாக கரோனா பரவல் அதிகரித்து வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகிலேயே கொரோனோவினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 7-வது இடத்தில் பிரான்ஸ் உள்ளது.

பிரிட்டனில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் அச்சத்தால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் பரவி வருகிறது. இதன் காரணமாக ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் புதிய வகை கொரோனோ வைரஸ் பரவி வருகிறது.

இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கொரோனோ தடுப்பு மருந்துகள் புதிய வகை வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.