பிரேசிலில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 858 பேர் பலி!!

சனி செப்டம்பர் 19, 2020

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 858 பேர் உயிரிழந்ததை அடுத்து நாட்டின் தொற்று பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,35,857 கடந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, பிரேசிலில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 857 ஆக உயர்ந்துள்ளது. பிரேசில் தினசரி இறப்புகளின் எண்ணிக்கையை குறைந்து வருகிறது. நாட்டில் மொத்த உயிரிழப்புடன் ஒப்பிடும்போது கடந்த 14 நாள்களில் உயிரிழப்பு விகிதம் 9 சதவீதமாக உள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 39,797 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 44,97,434 ஆக உயர்ந்துள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கையும் குறைந்து வருகிறது, கடந்த இரண்டு வாரங்களை விட தொற்று பாதிப்பு 22 சதவீதம் குறைந்துள்ளது.