பிரெஞ்சு மண்ணில் ஆழக் கால் பதிக்கும் தமிழீழ அரசியல்!!

செவ்வாய் ஜூன் 15, 2021

பிரான்சில் ஜுன் 20ம் திகதி முதற்சுற்றும் 27ம் திகதி இரண்டாம் சுற்றுமாக மாவட்ட, மாகாணத் தேர்தல்கள் நடக்க உள்ளன. இதில் தமிழீழத்தின் பிள்ளைகள் அடுத்தகட்ட அரசியற் பாய்ச்சலிற்குத் தயாராகி உள்ளனர்.

o

நகரசபைகளிற்கான ஆலோசனை உறுப்பினர்களில் இருந்து மாவட்ட ரீதியில், பல நகரங்களை பிரிதிநிதித்துவப்படுத்தும் மாவட்ட சபை உறுப்பினர்களாகவும், கட்சி சார்பிலும், சுயேட்சையாகவும் களமிறங்கி உள்ளனர்.

முக்கியமாக வல்-துவாசிலும் செய்ன் சன்-துனியிலும் தமிழீழத்தின் இளவல்கள் களமிறங்கி உள்ளனர்.

இல்-து-பிரான்சிற்காக, வல்-துவாசில் வில்லியே-லு-பெல் மற்றும் ஆர்னோவில் நகரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுயேட்சை இரட்டை வேட்பாளர்களாக Bonneuil-en-France இன் புதிய நகரபிதா Abdellah Benouaret உடன் இணைந்து உமையாள் விஜயகுமார் (Umaiyal Vijayakumar) அவர்கள் களமிறங்கி உள்ளார்.

j

அதே போல் அதே மாவட்டம் மற்றும் மாகாணத்திற்காக சார்சல் நகரத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்த கட்சியின் சார்பில் இரட்டை வேட்பாளர்களாக  Michel NEDJAR உடன் இணைந்து பத்ரிசியா சீவரட்ணம் (Patricia SEEVARAT) களமிறங்கி உள்ளார்.

j

அதே போல் பொண்டி, பவியோன் சூ புவா மற்றும் பொபினி (Bobigny Bondy Les Pavillons-sous-Bois) நகரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் Philippe Dallier,  Oldhynn Pierre ஆகியோர் குறிப்பிட்ட கட்சியின்  வேட்பாளர்களாக உள்ளனர். fஇதில் Philippe Dallier இற்குப் பிரதி வேட்பாளராக அல்லது (remplaçant) பிரேமி பிரபாகரன் (Piremy PIRABAHARAN) களமிறங்கி உள்ளார்.

நகரசபைகளைக் கடந்து மாவட்ட ஆலோசணை சபையிலும் உறுப்பினர்களாகும் வாய்ப்பினை அந்தந்தப் பிராந்தியத் தமிழீழ மக்கள் வழங்கவேண்டும். இதன் மூலம் எங்களின் குரல்களை, எங்களிற்கான நீதியினை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் சந்தர்ப்பத்தினை நாம் உருவாக்கிக் கொடுக்க  வேண்டும்.

அதே நேரம், மக்களின் வாக்குகளின் மூலம், மாவட்ட உறுப்பினர்களாகும் தமிழீழப் பிள்ளைகள், தங்கள் இனம் கடந்து வந்த வலிகளையும், இனவழிப்புகளையும்  ஓங்கி ஒலிக்கும் கடமையை ஏற்பதற்கு உறுதி கொள்ளல் வேண்டும்.

எனது இனத்தின் பிள்ளைகள் எவ்ளவு உயரத்திற்குப் போனாலும், அதிகார மட்டங்களை அடைந்தாலும், எங்களின் தமிழினம் இன்னமும் சிங்களப் பேரினவாதத்தின் அழிப்பிற்குள்ளும் அடக்கு முறைக்குள்ளும் சிக்கி இருப்பதை பதிவு செய்வோம் என உங்களின் மனதில் உறுதி கொள்ளுங்கள். உங்கள் பெற்றோர், உங்கள் உறவுகள் கடந்து  வந்த வலிமிகுந்த பாதை உங்கள் உதிரங்களிலும் கலந்திருப்பதை தொடர்ந்து நினைவில் கொள்ளுங்கள்,

உங்களிற்காக தமிழீழப் புலம் பெயர் சமூகமும், எங்கள் இனத்தின் விடிவிற்காக நீங்களும் ஒன்றாக இணைந்து பயணிக்க, உங்கள் இலக்குகளில், தேர்தலில்,  இரண்டு சுற்றுக்களையும் கடந்து வெற்றி பெற் வாழத்துகின்றோம்.

w

g

gdf