பிரித்தானிய தூதரகத்தில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் சந்திப்பு!!

புதன் ஏப்ரல் 07, 2021

தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்தர்களுக்கும் இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சாரா ஹல்டனுக்கும் (Sarah Hulton) இடையிலான சந்திப்பு நேற்று (06) கொழும்பில் நடைபெற்றது.தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் மற்றும் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

ஐக்கிய நாடுகள் சபை தொடர்பிலான விடயங்கள், அரசியல் தீர்வு, மாகாண சபை தேர்தல்கள், நில அபகரிப்பு, இளையோர் மற்றும் பெண்களின் பங்களிப்பு, அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.பிரித்தானிய தூதரகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தமிழீழ விடுதலை இயக்கம் அறிவித்துள்ளது.