பிரிட்டனை சேர்ந்த ஐஎஸ் யுவதியின் குழந்தை உயிரிழந்துள்ளது!

சனி மார்ச் 09, 2019

ஐஎஸ் அமைப்பில் இணைந்து கொண்ட பிரிட்டிஸ் யுவதியின் கைக்குழந்தை நோய்காரணமாக அகதிமுகாமில் உயிரிழந்துள்ளது.

பிரிட்டனிலிருந்து சிரியா சென்று ஐஎஸ் அமைப்புடன் இணைந்து கொண்டதன் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்த சமீனா பேகம் என்ற யுவதியின் மூன்று வார குழந்தையே சிரிய அகதிமுகாமில் உயிரிழந்துள்ளது

வடசிரியாவில் உள்ள அகதிமுகாமில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சுவாசப்பிரச்சினை காரணமாக  பல தடவைகள் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக குர்திஸ் புலனாய்வு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்

குழந்தையின் உடல்நிலை திடீர் என மோசமடைந்ததை தொடர்ந்து முகாமில் உள்ள மருத்துவநிலையத்திற்கு கொண்டு சென்றோம் எனினும் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை என சமீனா பேகத்தின் நண்பியொருவர் தெரிவித்துள்ளார்

குழந்தையை முகாமிற்குள்ளேயே புதைத்தோம் என அவர் தெரிவித்துள்ளார்

குழந்தை இறந்த விடயத்தை சமீனா பேகமின் சட்டத்தரணியும் உறுதி செய்துள்ளார்

2015 ம் ஆண்டு 15 சமீனா பேகம் வேறு இரு பாடசாலை மாணவிகளுடன் சிரியா சென்றார் எனவும் அங்கு 27 வயது நெதர்லாந்து பிரஜைய திருமணம் செய்தார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

சமீனா பேகத்திற்கு பிறந்த மூன்று குழந்தைகளும் இறந்துவிட்டன எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

கடந்த மாதம் கர்ப்பிணியான சமீனா பேகம் மீண்டும்  பிரிட்டனிற்கு திரும்புவதற்கான விருப்பத்தை வெளியிட்டிருந்தார்.

எனினும் பிரிட்டனின் உள்துறை அமைச்சர் சாஜிட் டேவிட் சமீனா பேகத்தின் பிரஜாவுரிமை பறிக்கப்படும் என அறிவித்திருந்தார்.