பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மான்!

வியாழன் நவம்பர் 28, 2019

அண்ணனை உன்னில் கண்டோம் அம்மான்!

தமிழீழத்தேசியத்தலைவர் பிரபாகரன் ஆழங்காண முடியாத ஆணிவேராய் அகிலத்தின் ஓர் அதிசயத்தலைவனாய் விளங்கின்றார்.  அந்த ஆணிவேருடன் இணைந்து  பல பக்க வேர்களாய் மிளிர்ந்த தளபதிகளுக்குள் பொட்டம்மான் ஓர் அரும் பொக்சிசம்.

மௌரியப் பேரரசைத் தோற்றுவித்த சந்திரகுப்த மௌரியனின் முதன்மை அமைச்சராகவும் வழிகாட்டியாகவும் இருந்தவர் சாணக்கியர். இவர்  ஈடற்ற அரசியல் இலக்கியமான அர்த்தசாத்திரத்தைப் படைத்தவர் . மேற்கத்திய உலகில் இவர் இந்தியாவின் மாக்கியவெல்லி என்று அறியப்படுகிறார். இந்த சாணக்கியர் போல பொட்டம்மானும் தலைவர் பிரபாகரனின் முதன்மை தளபதியாக விளங்கினார்.

ஈழத்து சாணக்கியன் பொட்ம்மானின் பல்பரிமாணத்தை புரிந்துகொள்ள, அவரின் அபரிதமான ஆற்றலை கூற தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரனால் மட்டுமே முடியும்.

பொட்டம்மான் என்ற சமுத்திரத்தின் சிறு பொட்டு துளியாக நவரசங்களாய் அந்த நாயகனை பற்றி...

1.அமைதி- எப்போது ஆர்பரித்துக்கொண்டிருக்கும் பொட்ம்மான் தலைவர் அவர்கள்  விடயங்கள் கூறும் போது அமைதியாக இருந்து உன்னிப்பாக தலைவரையே பார்த்த படி இருப்பார்.

2.ஆச்சரியம் - விடுதலைப்புலிகள் அமைப்பில் பெண்கள் உள்வாங்கப்பட்ட போது தியாகி.லெப். கேணல் திலீபன், லெப்.கேணல் விக்டர் ....போன்ற தளபதிகளே பெண் போராளிகளை வழிநடத்தினார்கள். 1990 களின் பிற்பகுதியிலேயே பெண்போராளிகளை   வழிந்டத்தும் பணி  பொட்டம்மானுக்கு கிடைத்த போது லெப். கேணல் அகிலாவின் ஆரம்ப புலனாய்வு வேலைகளை கண்டு ஆச்சரியப்பட்டார்.  தொடர்ந்து பெண்போராளிகளின்  புலனாய்பவுப்ணி  அவரை ஆச்சரியப்பட வைத்தது.

3.கோபம் - தலைவருக்கு இருந்த அதே கோபமே அவரிடம் இருந்து. எமது  புலனாய்வு நடவடிக்கையின் போது போராளிகளின் தவறால்  எமது புலனாய்வு முகவர்கள் எதிரியால் கைதாகுதல் அல்லது ஆபத்தை எதிர்கொளும்  அந்த நேரங்களில் எரிமலையாய் வெடிப்பார்.


4.வெறுப்பு - விடுதலை போராளிகள் ஒரு சிலர் எதிரியிடம் கைதாகும் வேளை தம்மை அழிந்துக்கொள்ளாமல் காட்டிக்கொடுப்பில் ஈடுபடும் போது வெறுப்படைவார். ஒருமுறை முத்துத்தம்பி என்றபோராளி  காட்டிக்கொடுப்பில் ஈடுபட்ட வேளை   ” பிராணி”  என வெறுப்புடன்  விழித்தார்.

5.அருவருப்பு - துரோகி கருணாவின் வாழ்க்கை முறையினை அறிந்த போது மிகுந்த அருவருப்புடன் கதைத்தார்.

6.ஆனந்தம்- தாக்குதல் வெற்றிச் செய்திகளின் போது ஆனந்தமாக இருப்பார் .குறிப்பாக   தென்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகர தாக்குதலின் போது மிகுந்த ஆனந்தமாக இருப்பார்.

7.வீரம்-  பொட்டம்மானின் வீரத்தை இந்தியாஅமைதி படை என்ற இந்தியா இராணுவம் முதல் ஆனையிறவில் 1991 இல் நின்ற சிறிலங்கா  இராணுவத்திற்கும் . முள்ளிவாய்கால் வரை பொட்டம்மான் எங்கே? என தேடும் சிறிலங்கா அரசுக்கும்  புரிந்திருக்கு்ம். 

8.நகைச்சுவை - பொட்ம்மான் வீரத்தின் விளை நிலம் மட்டுமல்ல நகைச்சுவையின் இருப்பிடமும் அவர்தான் போராளிகளின் நகைச்சுவைகளை ஆர்வமாக கேட்டுச் சிரிப்பார். அதே வேளை நகைச்சுவையாகவும் பேசுவார். ஆனால் ஒருபோது மனிதர்களின் உடலியல் குறைபாடுகளை நகச்சுவையாக கதைக்க கூடாது என கண்டிப்புடன் கூறுவார்.


9.கருணை - கருணை நிறைந்தவர்கள் தான் கரிகாலன் படையில் இருப்பார்கள். புலனாய்வு நடவடிக்கையின் போது முகவர்களாக செயற்பட்டு கைதாகி சிறையில் உள்ளவர்களின் குடும்பங்கள் கவனிக்கப்பட வேண்டும். அதே வேளை விடுதலைப்புலிகளின் சிறை தண்டணைக்கு உட்பட்டவர்களின்  குடும்பத்தவர்களும் கவனிக்கபட வேண்டும்  என்பதில் அக்கறையாக இருப்பார்  அப் பணிக்கு  என இரு போராளிகளை நியமித்து பணியினை பரீசிலனை செய்வார்.

ஈடுஇணையற்ற தலைவரின் அருகில் நின்ற பொட்டம்மானை அண்மையாக நின்று எம்  சாதாரண அறிவுடன் கண்டுகொண்ட சிறு துளிகள் தான் இவை.


பாரதி