பிரபாகரனும் என் மகன் தான்: வைகோவின் தாய்

வெள்ளி நவம்பர் 06, 2015

இலங்கையில் இந்திய இராணுவத்தை எதிர்த்து விடுதலைப் புலிகள் களத்தில் நின்ற காலம் அது, காயம்பட்டுக் கை-கால்களை இழந்து, குற்றுயிராய் வந்து சேர்ந்த 37 விடுதலைப்புலிகளைக் கலிங்கப்பட்டி இல்லத்தில் ஓராண்டுக்கும் மேலாக வைத்துப் பராமரித்து உணவு அளித்துப் பாசம் காட்டிப் பாதுகாத்தவர் வைகோவின் தாய் மாரியம்மாள்.


பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டபோது கலிங்கப்பட்டி வீட்டைச் சோதனையிட வந்த காவல்துறையினர், தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரனின் படத்தைக் கழற்றிய போது, ‘அந்தப் படத்தை ஏன் எடுக்கின்றீர்கள்? ‘அந்தப் பிள்ளையும் என் மகன்தான். அதைக் கழற்றாதீர்கள்’ என்று சொல்லித் தடுத்தார்.


தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்காக துணைநின்றதில் வைகோவின் தாயார் மாரியம்மாளும் தவிர்க்கப்பட முடியாதவர்.