பிரபல கசிப்பு கஞ்சா வியாபாரி மீண்டும் கைது!!

புதன் செப்டம்பர் 15, 2021

மட்டக்களப்பு தலைமையக காவல்துறை பிரிவில் உள்ள  கருவப்பங்கேணி பிரதேசத்தில் பிரபல கசிப்பு கஞ்சா வியாபாரி உட்பட இருவரை 70,250 மில்லி லீற்றர் கசிப்புடன் இன்று புதன்கிழமை (15) பகல் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறை போதை ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பு அதிகாரி சாஜன் ரி.கிருபாகரன் தலைமையிலான காவல்துறையினர் குறித்த பிரதேசத்திலுள்ள வீட்டை சம்பவதினமான இன்று பகல் முற்றுகையிட்டனர் இதன் போது இருவரை கைது செய்ததுடன் 70250 மில்லி லீற்றர் கசிப்பை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்ட அந்த பகுதியைச் சேர்ந்த பிரபல கசிப்பு கஞ்சா வியாபாரி பல கஞ்சா மற்றும் கசிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வந்துள்ளதுடன் இவருக்கு எதிராக பல வழக்குகள் இருப்பதாகவும் இதில் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.