பிரதேச சபை உறுப்பினர் கவனயீர்ப்புப் போராட்டம்!

செவ்வாய் செப்டம்பர் 10, 2019

திருகோணமலை கந்தளாய் தள வைத்தியசாலையின் வசதிகளை மேம்படுத்துமாறும்  சிறுநீரக நோய்க்கான சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கோரியும், கந்தளாய் பிரதேச சபையின் பொதுஜன பெரமுன உறுப்பினர் விஜேவிக்கிரம லமா ஹேவாகே,  கவனயீர்ப்புப் போராட்டத்தில், இன்று (10) ஈடுபட்டார்.

கந்தளாய் தள வைத்தியசாலையின் முன்றலில் பாய்களை விரித்து அவர் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தார். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், கந்தளாய் தள வைத்தியசாலையின் வளங்கள், நாளுக்கு நாள் குறைந்து செல்வதாகச் சுட்டிக்காட்டினார். 

கந்தளாய் தள வைத்தியசாலை, மத்திய அரசாங்கத்தின் கீழ் பெயரளவில் மாத்திரமே உள்ளதாகவும், வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள் நிலவுவதாகவும் அது விரைவில் நிவர்த்திச் செய்யப்பட வேண்டும் என்றும் இதன்போது அவர் வலியுறுத்தினார்.