பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தையொருவர்,சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்!!

வியாழன் ஏப்ரல் 08, 2021

காணாமல் போன தனது மகனைத் தேடி,பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தையொருவர்,சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவத்தில் வவுனியா-தாலிக்குளத்தைச் சேர்ந்த சந்தணம் ராகவன் (65 வயது)என்ற தந்தையே உயிரிழந்துள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு,அவரது மகனான ராஜ்குமார், வவுனியாவில்  காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் அவரை கண்டுப்பிடிப்பதற்கு தொடர்ந்து போராடி வந்தார்.

இதற்காக வவுனியாவில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களில் கலந்துகொண்டு, தனது மகனை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் குறித்த தந்தை தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.ஆனாலும் அவரது மகனை இறுதி வரையும் கண்டுப்பிடிக்க முடியாமலேயே தற்போது உயிரிழந்துள்ளார்.