பல மருத்துவ குணங்களை கொண்ட செவ்வாழைப்பழம்!

திங்கள் மார்ச் 02, 2020

வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புசத்தும், இரும்புச்சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களை கொண்டது.

செவ்வாழைப்பழம்,சிவப்பு நிறத்தில் தடிமனாகவும், சற்று நீளமாகவும் இருக்கும், சாப்பிட ருசியாக இருப்பதுடன், சற்று விலை அதிகமானது.  இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது.

இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவீதம் நார்ச்சத்து காணப்படுகிறது. சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும்.

சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும் செவ்வாழை பழத்தை தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வர சரும நோய் குணமாகும். தொற்றுநோய் கிருமிகளை கொல்லும் அரிய சக்தி செவ்வாழை பழத்திற்கு உண்டு.

வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வந்தால் உடலில் தொற்று நோய் பாதிப்பு கட்டுப்படும். சிலருக்கு மாலைக்கண் நோய் இருக்கும்.

இவர்கள் தினமும் காலை மற்றும் இரவு உணவுக்கு பிறகு 1மணி நேரம் கழித்து ஒரு செவ்வாழைப்பழம் என்று தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட இப்பிரச்னை நீங்கும்.

செவ்வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் ‘ஏ’ சத்து பார்வையை தெளிவடையச் செய்யும். கண் பிரச்னைகளை அகற்றும். வயதானவர்களுக்கு ஏற்படும் கண் பார்வை குறைபாட்டை செவ்வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் சரிசெய்யலாம்.

எந்த வயதினராக இருந்தாலும், கண் பார்வை குறைய ஆரம்பிக்கும்போது செவ்வாழைப்பழத்தை இரு வேளை ஒரு பழம் வீதம் 21 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவடைய ஆரம்பிக்கும்.

மலச்சிக்கல் வந்தாலே நமது உடலுக்கு பலவித சிக்கல் வந்து விடும்,  மலச்சிக்கலை செவ்வாழைப்பழம் தீர்த்துவிடும். செவ்வாழையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது,

அதனால் தினம் ஒரு செவ்வாழைப்பழம் இரவு உணவிற்கு பின்1 மணிநேரம் கழித்து சாப்பிட்டு வர செரிமான மண்டலத்தில் உள்ள பிரச்னைகள் நீங்கி, மலச்சிக்கல், வாயு தொல்லை வராமல் தடுக்கலாம். அல்லது வாரத்திற்கு மூன்று நாட்கள் இரவில் ஆகாரத்திற்கு பின், பாலுடன் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீர்ந்துவிடும்.

திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாமல் மனம் வருந்தி கொண்டிருக்கும் தம்பதியர் இருவரும் செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர்ச் சக்தி அணுக்கள் போதுமான அளவில் பெருகி கருத்தரிக்க வாய்ப்பாகும்.

குழந்தை இல்லாத தம்பதியினர், தினசரி இருவரும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரை ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

குழந்தைகளுக்கு எலும்புகளின் வளர்ச்சிக்கு அதிகளவு கால்சியம் தேவைப்படுகிறது. ஆகவே குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தினம் ஒரு செவ்வாழையை சாப்பிடலாம்.

நரம்புகள் நன்றாக இருந்தால்தான் நாம் எந்தச் செயலையும் சுறுசுறுப்பாக செய்ய முடியும். நரம்புத் தளர்ச்சி கொண்டவர்களின் கை, கால்களில் நடுக்கம் ஏற்படும். அதற்கு செவ்வாழைப்பழத்தை 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குறையும்.

நரம்பு தளர்ச்சி காரணமாக ஆண்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படும், தாம்பத்தியம் பாதிக்கப்படும். இவர்கள் செவ்வாழைப்பழத்தை தினமும் இரவு உணவுக்கு பிறகு பாலுடன் 30 நாட்களுக்கு விடாமல் சாப்பிட்டு வந்தால் இப்பிரச்னை தீரும்.

செவ்வாழையிலுள்ள உயிர்சத்துக்கள் நரம்புத் தளர்ச்சிக்கு ஊக்க மருந்தாக செயல்படுகிறது. பொதுவாக செவ்வாழைப்பழத்தை எல்லோரும், எல்லாக் காலத்திற்கும் சாப்பிட்டு உடல் ஆரோக்கியம் பெறலாம்.