பல பகுதிகளில் மின்தடை; வாக்கு எண்ணும் பணியில் சிக்கலா?

வியாழன் ஓகஸ்ட் 06, 2020

 சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மின்சார விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக மின்சார அமைச்சு தெரிவித்துள்ளது. 

 இன்று அதிகாலை பெய்த பலத்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாக மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு இடையூறு ஏற்படுவதைக் குறைக்க அனைத்து நடவடிக் கைகளையும் இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

 இந்நிலையில், மின் விநியோகிப்பதற்கான அனைத்து பணிகளையும் இலங்கை மின்சார சபை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.